Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? இந்த டிப்ஸ்-ஐ பயன்படுத்தினால் வழுக்கைத் தலையில் முடி வளரும்...

Do you know If you use these tips the hair on the bald head will grow ..
Do you know If you use these tips the hair on the bald head will grow ...
Author
First Published Apr 10, 2018, 12:57 PM IST


ஆண்களுக்கு இருக்கும் ஒரே அழகுப் பிரச்சனை வழுக்கைத் தலை. வழுக்கைத்  தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவற்றை சரி செய்தால் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.

வழுக்கைத் தலையில் முடி வளர்ச்சியை காணலாம் இந்த டிப்ஸ் மூலம்...

** பட்டை

பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள், ஸ்கால்ப்பில் நிலையை மேம்படுத்தும். மேலும் இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, வலிமைப்படுத்துவதுடன், தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும்.,

** ஆலிவ் ஆயில் 

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களை வலிமைப்படுத்துவதோடு, வளர்ச்சியையும் தூண்டும். 

தேவையான பொருட்கள்: 

பட்டை 

ஆலிவ் ஆயில் 

தேன் 

செய்முறை 

#1 

முதலில் ஆலிவ் ஆயிலை சூடேற்றி, பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

#2 

பின்பு தயாரித்து வைத்துள்ளதை, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் தலையை அலச வேண்டும். 

குறிப்பு இந்த மாஸ்க்கை அடிக்கடி ஸ்கால்ப்பில் தடவி வந்தால், ஸ்கால்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி விரைவில் தூண்டப்படுவதைக் காணலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios