Do you know If water is not smooth in the body will give eye shrink

கண்களை சுற்றி ஏற்படும் சுருக்கம் மற்றும் கருவளையத்தை போக்க உதவும் டிப்ஸ்:

கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானது. சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கம் மற்றும் கருவளையங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். 

இதோ அந்த டிப்ஸ்...

** கண்களைச் சுற்றி மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம். 

** கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். 

** சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் உபயோகிக்கலாம்.

** தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்யவும்.

** பாதாம் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் போது 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், கண்கள் ஊட்டமளிக்கப்பட்டு, கருவளையங்கள் மறையும்.

** உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரியுங்கள். அதற்கு தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து, அன்றைய தினத்தைத் தொடங்குங்கள்.

** கிளின்சர் பயன்படுத்துவதாக இருந்தால், சருமத்திற்கு ஏற்ற மற்றும் மைல்டு கிளின்சரைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். ஏனெனில் கண்களைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் சென்சிடிவ்வானது.

** தினமும் சரிவிகித உணவைக் கொண்டு வாருங்கள். குறிப்பாக வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள்.

** வெள்ளரிக்காய் கண்களைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். இதனால் கருவளையங்கள் நிச்சயம் மறையும்.