சேப்பக்கிழங்கின் மருத்துவ நன்மைகள்...

சேப்பங்கிழங்கு கீரையில் விட்டமின் A, C, நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் போன்ற வேதிப் பொருட்கள் அடங்கிய அனைத்து சத்துக்களும் உள்ளது.

சேப்பங்கிழங்கு கீரையை அடிக்கடி சூப் வைத்துக் குடிப்பதால், ஆசன வாயில் ரத்த கசிவு, மூலம் வகை நோய்கள் போன்ற அனைத்தும் பிரச்சனைகளும் குணமாகிவிடும்.

சேப்பங்கிழங்கு கீரை சாற்றுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடிக்கும் போது, காய்ச்சல் தணிகிறது. மேலும் இந்த இலை சாற்றினை வண்டு, கொசு போன்ற விஷப் பூச்சிக் கடிகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

சேப்பங்கிழங்குகளை வேகவைத்து சாப்பிடுவதால் , அது நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு, மாதவிலக்கு கோளாறுகளையும் சரிசெய்கிறது.

சேப்பங்கிழங்கை அரைத்து மூட்டுவலி உள்ள இடத்தில் போடுவதால், மூட்டுவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் இது பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவினை தடுக்கிறது.