சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளைக் கொண்டது.

சீதாபழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையு‌ம் அடங்கியுள்ளது.

இ‌வ்வளவு ச‌த்து‌க்க‌ள் ‌சீதாபழ‌த்‌தி‌ல் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மரு‌த்துவ குண‌ங்க‌ள்!

சீதாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.

சீதாப்பழச் சதையோடு உப்பை‌க் கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

சீதாப்பழ இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.