Do you know Grind the hair on the head and rub it on the head and bathe in the bath ...

ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது. முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது.

எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயமே. முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன.

சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம். தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.

தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம்.

ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கும்.

தலைப்பகுதியில் சொரியாசிஸ் பிரச்னை இருந்தாலும் முடி கொட்டும். ஷாம்பு மற்றும் எண் ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடி கொட்டும் பிரச்னையை தீர்க்க முடியாது.

முடி உதிர்வைத் தடுக்கும் பாட்டி வைத்தியம்

* முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்.

* முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

* மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.

* மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடி வளரும்.

* பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.