Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? அதிபயங்கரமான மூட்டு வலியை போக்க காதில் துணி கிளிப் மாட்டணும்...

Do you know Clipping cloth is a great way to get rid of pain ...
Do you know Clipping cloth is a great way to get rid of pain ...
Author
First Published Mar 17, 2018, 1:06 PM IST


நமது உடலின் அனைத்து பகுதிகளை கட்டுப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல் காது. 

கை, கால், தோள், தலை, நெஞ்சு, உடல் உறுப்புகள், மூட்டு வலி என உடலுக்கு பல்வேறு நன்மைகள் புரிகிறது. காதில் கிளிப் மாட்டி பயிற்சி செய்வதும் ஒன்று தான், விரல் கொண்டு அழுத்தம் கொடுத்து தோப்புக்கரணம் போடுவதும் ஒன்று தான்.

தோள், முதுகு வலி!

தினமும் கணினி முன்னர் டெஸ்க்கில் உட்கார்ந்து வேலை செய்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த முதுகு மற்றும் தோள் வலி இருக்கும். இதற்கு ஸ்ட்ரெச் பயிற்சி செய்வதை காட்டிலும் சிறந்த நிவாரணம் பெற, காதின் மேற்புறத்தில் அழுத்தம் கொடுத்து வந்தால் போதும். 

இது தோள், முதுகு வலி நீக்கி, நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும். ஒருசில நிமிடங்கள் அழுத்தம் கொடுதாம் போதுமானது. இது உங்கள் கோபத்தை குறைக்காவும் பயனளிக்கும்.

உடலுறுப்பு வலி!

திடீரென சுளீரென்று வலி உண்டாவது போல உணர்ந்தால், உங்கள் காதின் கீழ் பகுதியில் மிதமாக அழுத்தம் கொடுத்து வாருங்கள் (மேற்புற காதுக்கு சற்று கீழே). பிறகு உங்கள் உறுப்புகளில் தோன்றும் அந்த சுளீரென்ற வலி மறைந்துவிடும். அந்த வலி மிக அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

மூட்டு வலி!

உடலின் ஜாயின்ட் மூட்டுகளில் வலி உண்டானால், காதின் நடுபகுதிக்கு கீழ், அதாவது நான்கில் மூன்றாவது பகுதியில் அழுத்தம் கொடுத்து வந்தால், சின்ன, சின்ன வலி, ஜாயின்ட் மூட்டு வலி போன்றவை குறையும். இந்த மூட்டு வலி அதிகரித்து கொண்டே இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். மூட்டு தேய்மானமாக கூட இருக்கலாம்.

தொண்டை வலி!

காதின் நாடு பகுதியில் அழுத்தம் கொடுத்து வந்தால், சளி, சைனஸ் தொற்று காரணமாக ஏற்படும் தொண்டை வலி குணமாகும் என கூறப்படுகிறது. இதற்காக நீங்கள் வலிநிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

செரிமானம்!

காது மடல் மீது விரல்கள் கொண்டோ, துணி கிளிப் கொண்டோ அழுத்தம் கொடுத்து வந்தால் வயிறு சார்ந்த சின்ன சின்ன கோளாறுகள் தீரும். தலை , நெஞ்சு வலி! காதின் கீழ் பகுதியில் அழுத்தம் கொடுத்து வந்தால், தலை மற்றும் நெஞ்சு வலி குறையும். இது இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். 

மாதவிடாய் வலி! காதின் நாடு பகுதியில் தொடர்ந்து பலமுறை அழுத்தம் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலி குறையும். 

Follow Us:
Download App:
  • android
  • ios