Do you know Chronic disease of allergies in the asthma respiratory tract ...

ஆஸ்துமா சுவாசக் குழாயில் அலர்ஜியினால் உண்டாகும் நாள்பட்ட வியாதி. பரிபூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால், முற்றிலும் வரவிடாமல் தடுக்கலாம். அதாவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, அலர்ஜியை உண்டாக்காதவாறு செய்யலாம். 

இது பொதுவாக குளிர்காலத்தில் கிருமிகளின் தாக்கத்தினாலும், தூசு, புகை நிறைந்த இடங்களிலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் சரிவர தூக்கமில்லாத அப்னியா நோயினால் அவதிப்படுவார்கள். 

இரவுகளில் தூக்கம் இல்லாத போது அதிகப் பிரச்சனைகளை உண்டாகும். ஆஸ்துமா நோயினை முழுவதும் கட்டுக்குள் கொண்டுவர ஒரு ஜூஸ் உள்ளது. 

தினமும் இந்த ஜூஸை குடித்தால் உங்களுக்கு ஆஸ்துமா என்பதை மறந்துவிடுவீர்கள்…

ஹெர்பல் ஜூஸ் தயாரிக்கும் முறை

தேவையானவை:

எலுமிச்சை – 1

அன்னாசி – 2 துண்டுகள் சிறியது

வெள்ளரி – 2 துண்டுகள்

இஞ்சி – சிறிய துண்டு

மஞ்சள் – 1 சிட்டிகை

மிளகுப் பொடி – அரை ஸ்பூன்

செய்முறை

அன்னாசி , வெள்ளரி, இஞ்சியை அரைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து எலுமிச்சை சாறு, மஞ்சள் மிளகுப் பொடி ஆகியவை கலக்கவும்

பருகும் முறை:

இந்த ஜூஸை காலையில் எழுந்ததும் பருக வேண்டும். முக்கியமாக உடனுக்குடன் புதிதாக தயாரித்து குடிக்கவேண்டும். வைத்து குடிக்கக் கூடாது.

பலன்கள்:

விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்ட இதை பருகினால் நோய் எதிர்ப்பு மணடலத்தை பலப்படுத்தும். கிருமிகளை எதிர்த்து போராடும். கிருமிகள் வரவில்லை என்றால் ஆஸ்துமாவுக்கு வழியே இல்லை.