பட்டர் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். அதிக அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.

வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதாப்பழம், சிறு மர வகையைச் சார்ந்தது. சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

சீதாப்பழத்தின் மருத்துவ நன்மைகள்

சீத்தாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு.

புத்தி மந்தத்தைப் போக்கும்.

சுறுசுறுப்பின்மை போக்கி உடலை ஆற்றலோடு இயங்கச் செய்யும்..

மேலும், சீத்தாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகும்.

சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து புண்கள் மேல் தடவினால் புண்கள் ஆறும். அதே போல் இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.

சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.