Do you know Beetroot is rich in blood cleansing and increase blood production ...

பீட்ரூட் காய்கறியில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது. இரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது.

அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்வது அவசியம் அதோடு வைட்டமின் `சி’ சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக் கொள்ளப்படும்.

இரும்புச்சத்து அதிகம் உள்ள சிப்பி, மாமிசம், பாதம் கொட்டை, உருளைக்கிழங்கு போன்றவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அனிமீயா ஏற்பட வாய்ப்பில்லை.

பீட்ரூட் இரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தையும், இரத்த உற்பத்தியையும் சிறப்பாக செய்யும் காய்.

இதனை உண்டு நீங்களும் இரத்தை உற்பத்தியை அதிகரித்து நலமோடு வாழலாம்.

பீட்ரூட்டை காயாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால் ஜூஸாக சாப்பிடலாம்.