இன்றைய இளம் தலைமுறையினரை வாட்டி வதைக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல். இளநரை, சிறுவயதிலேயே முடி கொட்டி வழுக்கை விழுதல் போன்ற பிரச்னைகளால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர். இவர்களுக்கான தீர்வு தான் வேப்பிலை குளியல்.

தேவையான பொருட்கள்

· 5, 6 வேப்பிலைகள்

· கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழம்

· வேப்பங்குச்சி

செய்முறை:

வேப்பிலை, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தையும் வேப்பங்குச்சியையும் சேர்த்து சம அளவில் அரைத்து கொள்ளுங்கள்.

இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் `பேக்’ போடுங்கள். தலையை சிறிது நேரம் காயவிட்டு பிறகு நன்கு அலசுங்கள்.

இவ்வாறு வாரம் இருமுறை குளித்து வந்தால், தலையில் இருக்கும் ஈர்கள் மற்றும் பொடுகுகள் அழிவது மட்டுமின்றி தலைமுடியை கறுகறுவென்று நீளமாக வளரும்.

குறிப்பு:

இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்.