Asianet News TamilAsianet News Tamil

தூங்குவதற்கு முன்பு இதை செய்தால் தைராய்டு உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்காது...

do this before sleeping to avoid thyroid
do this before sleeping to avoid thyroid
Author
First Published Jun 22, 2018, 4:14 PM IST


தைராய்டு 

தைராய்டு சுரப்பியை பெரும்பாலும் மூன்று விதமான நோய்கள் பாதிக்கின்றன.  ஒன்று ஹைப்போதைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறையும் நிலை.  இரண்டு: ஹைப்பர் தைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும் நிலை.  மூன்று: கோயிட்டர். அதாவது தைராய்டு சுரப்பியின் அளவு பெரிதாகி, கழுத்தில் கட்டி தோன்றும் நிலை. 

ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள்
 
** அதிகமான சோர்வு, தளர்ச்சி, எதையும் ஆர்வமாக செய்ய முடியாத சோம்பேறித்தன நிலை, உடல் எடை அதிகரித்தல், மனஉளைச்சல், மறதி ஏற்படுதல், மலச்சிக்கல், முடி உதிர்தல், சரும வெளியே தள்ளிவரும் நிலை, மாதவிலக்கு தைராய்டு அறிகுறிகள் வறட்சி, 

** மாதவிலக்கு குளறுபடிகள், குழந்தையின்மை, உள்ளுக்குள் குளிர்ச்சி ஏற்படுதல், கொலஸ்ட்ரால் அளவில் வித்தியாசம் தோன்றுதல். ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள் அதிக சோர்வு, அதிக கோபம். அதிக பசியும், அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறையும் நிலை. 

** இதய துடிப்பு அதிகரித்தல், உடல் நடுக்கம், மூச்சுவிட சிரமப்படுதல், அடிக்கடி மலம் கழிக்க தோன்றும் நிலை, கை-கால் நடுக்கம், அதிக உடல்சூடு, வியர்வை, கண்கள் கோளாறு, கருச்சிதைவு போன்றவை.  

தைராய்டு பிரச்சனைக்கான காரணங்கள் 

** மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், நோயெதிர்ப்பு குறைபாடு போன்றவை தான். ஆனால் தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் போக்க ஒரு அற்புதமான வைத்திய முறையை இருக்கு.

** அதுவும் வெங்காயத்தைக் கொண்டு தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கி, தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

தைராய்டு பிரச்சனையை போக்க என்ன செய்ய வேண்டும்?

** இரவில் தூங்குவதற்கு முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதன் சாறு எடுத்து கழுத்தின் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

** அதன்பின் கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் தைராய்டு பிரச்சனையை வராமல் தடுக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios