Asianet News TamilAsianet News Tamil

உங்கள் சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள பியூட்டி பார்லர் போக வேண்டாம்! இதோ ஈஸி டிப்ஸ்...

Do not go to the beauty parlor to keep your skin glowing! Here are some tips ...
Do not go to the beauty parlor to keep your skin glowing! Here are some tips ...
Author
First Published Jul 9, 2018, 1:33 PM IST


** வெள்ளரிக்காய் 

சருமத்தைக் கருப்பாக வெளிப்படுத்தும் இறந்த செல்களை அகற்றுவது மிகவும் அவசியம். அதற்கு வெள்ளரிக்காயை நன்கு அரைத்து முகம் முழுவதும் தடவுங்கள். இது சருமத்தை வெளுப்பாக்கும் வகையில் செயல்படுவதுடன் கருவளையங்களை நீக்கி இறந்த செல்களையும் அகற்றும்.

** பீட்ரூட் 

சருமத்திற்கு இளஞ்சிவப்பைத் தர பீட்ரூட் ஒரு சிறந்த வழி. இரண்டு அல்லது மூன்று பீட்ரூட்களை வேக வைத்து அதை நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன், மூன்று ஸ்பூன் கவுலின் பவுடர் (உங்கள் வீட்டின் அருகில் உள்ள மருந்து கடைகளில் சுலபமாகக் கிடைக்கும்) சேர்த்து நன்கு கலக்கி உங்கள் முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பூசுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவி விடுங்கள்.

மைசூர் பருப்பு மற்றும் பால் 

கொஞ்சம் மைசூர் பருப்பை தண்ணீரில் போட்டு 30 நிமிடம் ஊற வையுங்கள். அதை பின்னர் நன்கு அறைத்து பசைப் போன்று செய்து, அதனுடன் கவுலின் பவுடரை சேருங்கள். அதை முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டு பின்பு அலசுங்கள்

** எலுமிச்சை, வெள்ளரி, பால் மற்றும் தேன் கலவை 

வெள்ளரிக்காய் துருவல், எலுமிச்சை சாறு (கால் கப்), ஐந்து ஸ்பூன் தேன் பற்றும் பால் ஆகியவற்றைக் கலந்து நீங்கள் வீட்டிலேயே ஃபேஸ் பேக்கை தயார் செய்யலாம். இதனுடன், மைதா மாவைச் சேர்த்தால் கலவை நன்கு கெட்டியாகக் கிடைக்கும். இதை ஃப்ரிட்ஜில் 5-6 மணி நேரங்கள் வைக்கவும். பின்னர் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் காயவிட்டு அலசினால் சிவந்த முகம் ரெடி.

** எலுமிச்சை மற்றும் பால் மசாஜ் 

உங்கள் சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு கால் கப் எலுமிச்சை சாற்றை பாலுடன் கலக்கவும். அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

Follow Us:
Download App:
  • android
  • ios