1.. மீன்:

கண் பாதிப்பு, இதய நோய், ஆஸ்துமா போன்ற எண்ணற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, மீன் ஒரு சிறந்த உணவு. மீனில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளன. இவ்வளவு சத்துகளைக்கொண்ட மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு.

மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

2.. வாழைப்பழம்

பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.

3.. தர்ப்பூசணி

தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத் தொல்லையையும் ஏற்படுத்தும்.

4.. முட்டை

பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.

5.. கீரை

கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

6.. ஆரஞ்சு ஜூஸ்

பால் கலந்த ஓட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது, ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது தவறு. ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும் நொதிகளை, ஆரஞ்சு ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம் அழித்துவிடும். மேலும், ஆரஞ்சில் உள்ள அமிலம், பாலைத் திரிக்கச் செய்வதுடன் உடலில் சளியின் தேக்கத்தையும் அதிகரிக்கும்.

7.. அசைவம்

கோழி மற்றும் மீன் இரண்டையும் பால் மற்றும் எள்ளுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலின் மிக நுண்ணியத் துளைகள் கெட்டு, உடல்நலக் கெடுதல் உண்டாகலாம்.