Asianet News TamilAsianet News Tamil

தலைச்சுற்றல், கிறுகிறுப்பால் அவதிபடுவோர் இந்த டிப்ஸ் முயற்சி செய்யுங்கள்…

dizziness kirukirup-the-avatipatuvor-try-these-tips
Author
First Published Jan 14, 2017, 3:03 PM IST

அடிக்கடி பித்தம் தலைசுற்றல் மற்றும் தோல் வியாதிகள் வருபவர்களுக்கு நிரந்தர குணம் அடைய கொத்தமல்லி விதை (தனியா) பச்சையாக ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.

காலையில் வெறும் வயிற்றில் இந்த உடைத்த தனியாவை ஒரு கை அள்ளி, கொதித்த வென்னீரில் போட்டு மூடி வைக்கவும்.

தேவையானால் சிறிது நேரம் கொதிக்க வைக்கலாம். பிறகு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடலில் கெட்ட நீர் பிரிந்து ரத்தம் சுத்தமாகும்.

கொத்தமல்லி கசகசா பருத்தி விதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வென்னீரில் கலந்து குடிக்க, தலைச்சுற்று, கிறுகிறுப்பு நீங்கும்.

அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம். முற்றிய இஞ்சியை நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள். தலைச்சுற்றும் நிற்கும். பிளட் பிரஷரும் குறையும்.

வெண்தாமரைப்பூவின் இதழ்களைத் தூளாக்கி காப்பி டிகாக்சனைப்போல் தயாரித்து பாலில் ஊற்றிச் சாப்பிட்டால் - தலைச்சுற்றல், கிறுகிறுப்பு. குணமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios