டி.வி, போன் பார்த்து உணவு சாப்பிடுகிறீர்களா? இது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா..!

டி.வி., போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

disadvantages of watching tv and use mobile phone while eating food in tamil mks

சாப்பிடும் போது டிவி, போன் பார்க்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படி டிவி அல்லது ஃபோனை பார்த்து சாப்பிடுவது மிகவும் சுவாரஸ்யமான ஒரு தனி உணர்வு என்று கூட சொல்லலாம். சிலர் அப்படி சாப்பிடும்போது அதில் மூழ்கிவிடுவது உண்டு. ஆனால் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அப்படி சாப்பிட கூடாது என்று நம்மை திட்டுவர்கள். ஆனால் நாம் அதை காது குடுத்து கூட கேட்பதில்லை. 

ஆனால், டி.வி., போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் இந்த பழக்கம் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், டி.வி., போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் வரும். அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்..

disadvantages of watching tv and use mobile phone while eating food in tamil mks

பல சிக்கல்கள் எழுகின்றன:
போன், டி.வி பார்க்கும் பழக்கத்தை குறைக்காவிட்டால், நாளடைவில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் கண் பலவீனம், உடல் பருமன், வயிற்று பிரச்சனைகள், வாயு பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் டென்ஷன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதையும் படிங்க: "பசிக்குது சோறு போடுமா"..! சீரியல் பார்க்கும் போது டிஸ்டர்ப் செய்ததால் கணவனை கத்தியால் ஒரே வெட்டு வெட்டிய மனைவி ..!

உணவில் கவனம் இல்லை:
இப்படி டிவி அல்லது ஃபோனைப் பார்ப்பதால் அவர்களால் சாப்பிடுவதில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இதனால் உணவை மென்று சாப்பிடாமல், விழுங்கி சாப்பிடுவார்கள். இதனால், செரிமான பிரச்னை ஏற்படுகிறது. மேலும் இரவில்  இப்படி சாப்பிட்டால் தூக்கத்தை கெடுக்கும்.

இதையும் படிங்க:  டிவி பார்ப்பதை இந்துக்கள் நிறுத்துங்கள்... ஆன்லைன் நியூஸ் படிங்க... நித்தியானந்தா அட்வைஸ்..!

அதிகப்படியான உணவு:
டிவி அல்லது ஃபோனைப் பார்த்துக்கொண்டே அதிகமாக சாப்பிடுவது. இதனால், உண்ட உணவு ஜீரணமாகாது. சில சமயங்களில் மூச்சுவிடக்கூட முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். எனவே, சாப்பிடும்போது டிவி, போன் பார்ப்பதை விட சாப்பிட்ட பிறகு பார்ப்பது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மற்றவர்களுடன் உறவு இல்லை:
இந்த பழக்கத்தால் மற்றவர்களுடன் எந்த உறவும் இருக்காது. எப்படியெனில், இந்த பழக்கத்தால், தங்கள் பிரச்சினைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்காது. அவர்கள் தனி உலகத்தில் இருப்பார்கள். இதனால் வீட்டிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த விளைவு குழந்தைகளை பாதிக்கிறது. சாப்பிடும் போது,   சில நேரங்களில் நீங்கள் அதில் அதிகமாக கவனத்தை வைப்பதால், உங்களால் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. இது உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முடிந்தவரை சாப்பிடும் போது டிவி, போன் பார்க்காமல் இருப்பதை தவிர்க்கவும்..அதுதான் நல்லது..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios