Did you know Cigarette cigarette smoke are 4 thousand toxic chemicals
நாளுக்கு நாள் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
சிகரெட் பழக்கம் பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைகின்றது.
சிகரெட், பீடி புகையில் 4 ஆயிரம் நச்சு ரசாயனங்கள் உள்ளன.
மெழுகு வண்ணபூச்சு, அசிடிக் ஆசிட்சினிகள், மீத்தேன், சாக்கடை வாயு, காட்மியம் பேட்டரி தொழிற்சாலை சுரப்பி, வாகன புகை, மெத்தனால் ராக்கெட் எண்ணை, நிக்கோஷன் பூச்சி கொல்லி, ஆர்சனிக் நஞ்சு அம்மோனியா சோப்புதூள் உள்ளிட்ட 4 ஆயிரம் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது.
இதில் 200 வகையான நச்சு பொருட்கள் புற்றுநோயை உண்டாக்க கூடியது.
கருவுற்ற பெண்கள் அருகில் புகை பிடிப்பதால் தாயும், கருப்பையில் வளரும் சிசுவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
சிகரெட் புகைப்பதால் மூளைகட்டி, மூளை வலிப்பு, பக்கவாதம், மார்பக புற்று நோய் நெஞ்சக நோய்கள், ஆஸ்துமா உள்பட பல நோய்கள் ஏற்படுகிறது.
இந்த பழக்கத்தை கைவிடுவதற்கு, மிகவும் உறுதியுடன் இருங்கள்.
புகை பழக்கத்தை தூண்டும் புகையிலை பொருட்கள், தீ மூட்டிகள், தீப்பெட்டிகள் மற்றும் சாம்பல் தட்டுகள் போன்றவற்றை தூக்கி வீசுங்கள்.
உங்கள் குடும்பத்தினரிடம் புகை பிடிப்பதை கைவிட ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேளுங்கள்.
உங்களை புகை பிடிக்க தூண்டும் சந்தர்ப்பங்களை கண்டறிந்து அவற்றை தவிர்த்து விடுங்கள்.
