Skin Lesions: சர்க்கரை நோயாளிகளே: தோல் புண்களை சரி செய்யும் சில எளிய முறைகள்!

3 வாரங்கள் கடந்தும் புண் ஆறாமல் இருப்பின், அது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். ஆகவே இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்வது தான் மிகவும் நல்லது. அவ்வகையில் இதனைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம். 

Diabetics Some Simple Ways to Treat Skin Lesions

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் எதை சாப்பிட்டாலும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில், சில உணவுகள் இவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி விடும். பொதுவாக சர்க்கரை நோய் ஏற்படுத்தும் பிரச்சனைகளில் முக்கியமானது தோல் பிரச்சனை. ஒருவருக்கு கை, கால்களில் புண் வந்தால், குறைந்தபட்சம் 3 வாரத்திற்குள் ஆறிவிடும். ஆனால், 3 வாரங்கள் கடந்தும் புண் ஆறாமல் இருப்பின், அது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். ஆகவே இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்வது தான் மிகவும் நல்லது. அவ்வகையில் இதனைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம். 

புண்களை குணப்படுத்தும் முறைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் வந்தால், புண்களை மிகவும் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்த் கொள்ளுங்கள். தோலில் எரிச்சல் இருக்கத் தான் செய்யும். இருப்பினும் தோலை உலரவைத்து விட்டு, துணியால் கட்டு போட்டு அவ்விடத்தில் கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் இதே போல, காயம் ஏற்பட்ட இடத்தை சுத்தம் செய்தபின், கட்டுகளை மாற்றுங்கள். காயங்கள் ஆறும் வரை தொடர்ந்து இப்படியே செய்ய வேண்டும்.

Eyesight: உங்கள் கண் பார்வையை தெளிவாக்க இந்த உணவுகள் போதும்!

புண்களில் கொப்புளம் வந்தால் உடைக்கவோ அல்லது வெடிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக அந்த இடத்தில், சோப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு, சுத்தம் செய்து கொப்புளத்திற்கு பாக்டீரியா எதிர்ப்பு களிம்பு தடவி விடலாம். பின்னர் துணியைக் கொண்டு மூடி விட வேண்டும். ஒவ்வொரு நாளும் கட்டுகளை மாற்றுவது அவசியமாகும்.

புண்களை மிதமான சோப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி உலர வைக்க வேண்டும். தீக்காயமே ஏற்பட்டாலும் துணியின் திண்டு கொண்டு மூடி விடலாம். தினந்தோறும் கட்டுகளை மாற்றுவது மிகவும் அவசியமாகும். காயம் மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், நீங்களாகவே சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து விட்டு, மருத்துவரை அணுகுவது சிறந்தது.

நீரிழிவு நோயாளிகள் தோல் உறைவை எதிர்கொண்டால், சருமத்திற்கு சூடாக இல்லாத தண்ணீரைப் பயன்படுத்துவது தான் நல்லது. அந்த இடத்தில் தேய்க்கவோ அல்லது க்ரீம்கள் தடவுதலோ கூடாது. பாதிக்கப்பட்ட கால் மற்றும் கைகளுக்கு உடனடியாக வேலை எதுவும் கொடுக்க கூடாது.     

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios