Dangerous habits after meal
உணவு சாப்பிட்டு முடித்ததும், நாம் மேற்கொள்ளும் தவறான பழக்க வழக்கங்கள் சாப்பிட்ட உணவின் பலன் உடலுக்கு முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் ஏற்படுவது, சத்துக்குறைபாடும், நோய்களும் ஏற்படுகின்றன.
சாப்பிட்டு முடித்த பின்னர் என்னவெல்லாம் செய்யக்கூடாது…
1.. சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது.
உணவு வகைகள் ஜீரணமாகவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும்.
2.. உடற்பயிற்சி செய்யக் கூடாது
உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட, போதிய ரத்தம் கிடைக்காது. சாப்பிட்டு, 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.
3.. சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது
சாப்பிட்டவுடன் குளித்தால், கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும்.
குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும்.
4.. சிப்ஸ், அப்பளம்
உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எப்போதும் அதிக குடிநீர், கலோரி இல்லாத பானங்களைக் குடிக்கவும்.
"தொலைக்காட்சி' பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் அடைத்துக் கொள்ளும். அப்போது ஜீரணச் சுரப்பிகளை சுரக்கத் தூண்டுவதில்லை.
காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும்.
5.. சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடக்கூடாது
காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்
