பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று சொன்னால் வளர்ந்த குழைந்தைகளான நீங்கள் நம்புவீர்களா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கண்ணீர் விட்டு அழாத குழந்தைகளை விட, கண்ணில் நீர் சுரக்க அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுகிறது என்பதே உண்மையான நிதர்சனம். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி.

மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்டது.

லைனோசம் என்ற ஒரு வகை இரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது என்பது இக்காலத்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

“அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்பது அக்காலத்து தமிழர்கள் பழமொழியில் ஒளித்துவைத்த மருத்துவ குறிப்பு.

இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம், உடனே சமாதானம் படுத்தவும் வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதற்காக கட்டாயப்படுத்தி அழ வைக்க வேண்டாம்…