மிதமான தீயில் வைத்து சமைப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!!
உணவை முழுமையாக சாப்பிடாமல் இருந்தால் மட்டுமல்ல, அதை முறையாக சமைக்காமல் போனால் கூட பலன்களை இழக்க நேரிடும். இதனால் உணவை முறையாக சமைக்கும் பக்குவத்தை தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம்? என்பதை பொறுத்து தான், தேக ஆரோக்கியம் கணக்கிடப்படுகிறது. நமது ஆரோக்கியம் காப்பதற்கு உணவின் பங்கு முக்கியமானது. அதனால் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும், இல்லையென்றால் எந்த பலனும் கிடைக்காது. முழுமையாக சாப்பிடாமல் போனால் மட்டுமல்ல, உணவை முறையாக சமைக்காவிட்டாலும் எந்த பலன்களும் கிடைக்காது. இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் உணவைத் தயாரிக்கும் நேரத்திலேயே, அதனுடைய அனைத்து சத்துக்களையும் போக்கிவிடுகின்ரனர். அதனால் உணவு சத்து குறையாமல் சாப்பிடுவதற்கு என்ன செய்யலாம்? என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
எண்ணெய்த் தேர்வு
சமையலுக்கு ஏற்றவாறு எண்ணெயின் தேர்வு இருப்பது முக்கியம். எப்போதும் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான எண்ணெயை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்துங்கள். நல்ல எண்ணெய்கள் உணவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை பாதுகாக்கும். அதேபோன்று குழம்பு அல்லது சாம்பாரை நல்லெண்ணெயில் செய்தால், பொறியலுக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். ரசத்துக்கு நெய் பயன்படுத்துங்கள். இதன்மூலம் ஒவ்வொரு எண்ணெய் மூலம் கிடைக்கும் பலன்கள், ஒரே உணவில் உங்களுக்கு கிடைத்துவிடும்.
முறையாக சமைக்க வேண்டும்
ஒவ்வொரு உணவும் அதற்கேற்ற பக்குவத்தில் சமைக்கப்படுகிறது. அதன்படி சமைப்பது தான் சரி. வெறுமனே வதக்குவது, காய்ச்சுவது, ஆவியில் வேகவைப்பது, வறுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. அதேபோன்று ஒவ்வொரு காய்கறிக்கும் சமைக்கும் நேரம் என்பது மாறுபடும். அதற்கேற்றவாறு சமைத்து முடிக்க வேண்டும். உரிய முறையில் செய்யவில்லை என்றால், அனைத்து சத்துக்களையும் இழக்க நேரிடும்
தீயை குறைத்துக்கொள்ளுங்கள்
இன்று நமது நாட்டில் அனைத்து குடும்பங்களும் எல்.பி.ஜி எரிவாயு சமையலுக்கு மாறிவிட்டனர். அதனால் சமைக்கப்படும் பொருளுக்கு ஏற்றவாறு தீயின் அளவை கையாளுவது எளிதாகிவிட்டது. முடிந்தவரை குறைந்த தீயில் உணவுகளை சமைப்பது நல்லது. இப்படிச் செய்வதால், உணவு அதிக நீர் வற்றாமல் செழிப்பாக இருக்கும். அதேபோல குறைந்த தீயில் சமைப்பது, உணவுகளின் சுவையை மேம்படுத்தும். மேலும் சத்துக்களை இழக்காமல் இருக்க 'ஸ்லோ சமையல்’ தான் சிறந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சூட்டை பராமரிப்பது முக்கியம்
உணவுகளை சமைக்கும்போது கொதிப்பது பொதுவானது. ஆனால் அதிகமாக கொதிக்க வைத்தால் சத்துக்கள் குறையும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு வீட்டிலும் உணவு சமைத்த பின் எஞ்சியவற்றை மீண்டும் சூடுபடுத்தும் பழக்கம் உள்ளது. ஆனால் ஒருமுறை தயாரிக்கப்பட்ட உணவை மீண்டும் சூடுபடுத்துவதால் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன.
இருதய நலன் காக்கும்; எடையை கட்டுக்கும் வைக்கும் காளான்கள்..!!
காய்களை வெட்டுவதில் கணக்கு
உணவுகளைத் தயாரிப்பதற்காக பல்வேறு காய்கறிகளை வெட்டும்போது, ஒவ்வொன்றுக்குரிய அளவுக்கு ஏற்றார் போல நறுக்கி எடுக்கவும். அதேபோன்று சமையலை பொறுத்தும் காய்கறிகளை வெட்டும் அளவு மாறுபடலாம். இவை அனுபவத்தின் மூலம் தான் உங்களுக்கு தெரியவரும். எனினும் எப்போதும் காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டிவிடாதீர்கள். இது உணவையும் கெடுத்துவிடும், சத்துக்களையும் போக்கிவிடும். பொரியல் என்றால் ஓரளவுக்கு விரல்களில் பிடிக்கும் படி காய்கள் இருக்க வேண்டும். குழம்பு மற்றும் சாம்பாருக்கு விரல் அளவுக்கு காய்கறிகளை அதிகப்பட்சமாக வெட்டலாம். கூட்டு, பச்சடி என்றால் காய்கறிகளை பெரிதாகவே வெட்டலாம். ஆனால் நீர் காய்கறிகளை எப்போதும் பெரிதாகவே வெட்ட வேண்டும்.