உலகில் காணும் உணவுப் பொருள்கள் அனைத்திலும் மிகவும் உயர்வானது தேங்காய்.
அதற்கு காப்பாக அமைந்திருப்பது போல, கெட்டியான, வன்மையான ஓடு வேறு எந்த காய்க்கும் வாய்க்கவில்லை.
அருந்த நீரும், உண்ண உணவும் ஒருங்கே பெற்ற உயரிய உணவுக் குடுக்கை (Lwneh Box) தேங்காய்.
உடல் உறுப்புகளுக்கு மிக்க வலிமை அளிப்பதோடு, அவற்றை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்வது தேங்காயாகும்.
தேங்காய் நன்கு பசி தாங்கவல்லது.
தேங்காயை உணவாக உண்டு வருவதால் தோலும் உள்ளுறுப்புகளும் மென்மையும் ஒலியும் பெறுகின்றன.
மூட்டுகள் உராய்தலின்றி செயல்படுகின்றன.
ஐம்புலன்களுமே ஆற்றலில் சிறக்கின்றன.
உடலுக்கு நச்சு ஒழிப்பு ஆற்றல் மிகுகின்றது.
இளநீர் முதலாக நன்கு முற்றிய நெற்றுத் தேங்காய் வரை எந்நிலையிலும் உண்ணத்தக்க ஒப்பற்ற உணவு தேங்காய் ஒன்றே!
