இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பெங்குடல் புற்றுநோய்- ஆய்வு கூறும் அதிர்ச்சி..!!
சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள் ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புக்கு பங்களிக்கின்றன. உடல் பருமன் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெருங்குடல் புற்றுநோய் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெருங்குடல் புற்றுநோய் பெரும்பாலும் வயதானவர்களை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இன்று கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஐந்தில் ஒன்று 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படுவதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள் ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புக்கு பங்களிக்கின்றன. உடல் பருமன் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல் பருமன் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் புற்றுநோய் கண்காணிப்புக் குழு கூறுகிறது. அதிக உடல் எடையால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுகிறது. சர்க்கரை-இனிப்பு பானங்களின் அதிக நுகர்வு மற்றும் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் அதிக நுகர்வு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன.
'பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பில் மரபணு மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைவரும் கொலோனோஸ்கோபி செய்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதற்கு ஆல்கஹால், புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சமநிலையற்ற உணவுப் பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.
கோடையில் ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க இதைச் செய்யுங்க..!!
இந்த ஆபத்து காரணிகள் அனைத்தும் நுண்ணுயிர் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெருங்குடல் அல்லது மலக்குடலின் புறணியில் உள்ள ஆரோக்கியமான செல்கள் மாறி, கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து, கட்டி எனப்படும் பாதிப்பை உருவாக்கும் போது பெருங்குடல் புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே பிடித்துவிட்டால், உயிர்வாழும் விகிதம் 90 சதவிகிதம் என்று வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
வயிற்று வலி என்பது பெருங்குடல் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் இரத்தம் தோய்ந்த மலம், கறுப்பு மலம், இரத்தம் இல்லாததால் ஏற்படும் சோர்வு, வயிற்று வலி, குடல் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், உடல் சோர்வு மற்றும் பசியின்ம போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்