எப்போதும் புகை ஊதிக் கொண்டே இருப்பவர்களுக்கு புற்றுநோயோ அல்லது நுரையீரல், சுவாசம் சார்ந்த எந்த பிரச்சனையும் வராது.

ஆனால், புகைப்பழக்கமே இல்லாத சிலர் புகைப்பவர்கள் பக்கம் நின்றால் இருமல், தலைவலி, ஏன் இதனால் புற்றுநோய் பாதிப்பு அடைந்தவர்கள் கூட பலர் இருக்கிறார்கள்.

அது எப்படி புகைப்பவருக்கு புற்றுநோய் வராமல் இருக்க? கூட இருப்பவர்களுக்கு அந்த வியாதி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு காரணம் சொல்கிறார் கேளுங்கள்.

அவை மரபணு குறிப்புகள் / குறிப்பான்கள் தொடர்புடையவை என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மோர்கன் என்பவர் நடத்திய ஆய்வில், சில வகை மரபணு கொண்டவர்கள் சாதாரணமாகவே நீண்ட ஆயுள் பெற்றிருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், ஒற்றை நியூக்ளியோடைட் பல்லுருத் தோற்றங்கள் (Single Nucleotide Polymorphisms) நெட்வொர்க், அதாவது டி.என்.ஏ வரிசையில் மாறுபட்டு இருக்கும் ஓர் வகை.

இது மக்களில் பொதுவாக சிலருக்கு இருப்பது உண்டு. இவர்களுக்கு சுற்றுசூழல் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறதாம். ஆயுள் நீடிக்கிறது.

இந்த மரபணுக்கள் உயிர்மங்களை அதிகரித்தும், சேதமடையாமல் பாதுகாத்தும் வாழ்நாளை நீட்டிகிறது என மோர்கன் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.

புகைத்தாலும் பாதிப்பு ஏற்படாது இந்த மாறுபட்ட மரபணுக்கள் கொண்டவர் உயிரியல் அழுத்தங்களால் ஏற்படும் பாதிப்பு, புகைப்பிடித்தல் போன்றவற்றால் பெரிதாய் பாதிப்படைவதில்லை.

ஏனெனில், மேல் கூறியவாறு இவர்களது உடல் செல்கள் உடனடியாக சேதத்தை சரிசெய்து விடுகிறதாம்.

புகை உயிரைக் கொள்ளும் நோய். என்று தான் நாம் அறிந்துள்ளோம். ஆனால் இந்த புதிய ஆய்வில், மாறுபட்ட மரபணு அதை தவிர்க்க செய்கிறது என்பது ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது.

மாறுபட்ட மரபணுவும் புற்றுநோயும் இது ஏறத்தாழ புகையால் ஏற்படும் புற்றுநோயை 11% வரையிலும் குறைக்கிறது என மோர்கனின் புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.