Asianet News TamilAsianet News Tamil

நன்மை, தீமை இரண்டும் கொண்டது மிளகாய்…

chillies fact
Author
First Published Dec 7, 2016, 3:41 PM IST


சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில் நன்மைகளும், தீமைகளும் உள்ளன.

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம்… காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், விட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம்.

100 கிராம் காய்ந்த மிளகாயில் உள்ள சத்துக்கள்

புரதம் – 15.9 கிராம், கொழுப்பு- 6.2 கிராம், நார்ச்சத்து – 30.3 கிராம், இரும்பு – 2.3 கிராம், கால்சியம் – 160 மிகி, விட்டமின் சி – 50 மிகி மற்றும் விட்டமின் ஏ – 345 மியூஜி உள்ளது.

100 கிராம் பச்சை மிளகாயில் உள்ள சத்துக்கள்

புரதம் – 2.9 கிராம், கொழுப்பு- 0.6 கிராம், நார்ச்சத்து – 6.8 கிராம், இரும்பு – 4.4 கிராம், கால்சியம் – 30 மிகி, விட்டமின் சி – 111 மிகி மற்றும் விட்டமின் ஏ – 175 மியூஜி உள்ளது.

 

100 கிராம் குடை மிளகாயில் உள்ள சத்துக்கள்

புரதம் – 1.3 கிராம், கொழுப்பு- 0.3 கிராம், நார்ச்சத்து – 1.0 கிராம், இரும்பு – 0.567 கிராம், கால்சியம் – 10 மிகி, விட்டமின் சி – 137 மிகி மற்றும் விட்டமின் ஏ – 427 மியூஜி உள்ளது.

 

மருத்துவ பயன்கள்

மிளகாயில் கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம்.

நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம்.

அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

மிளகாயில் உள்ள Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது.

அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்னணி இதுதான்.

மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios