Can not wait for the sunshine? Whats the fear of aloe?

இந்த வெயிலை சமாளிக்க போகிறோமோ? என்ற பயமும், மன அழுத்தமும் எல்லாருக்கும் இருக்கும்.

இதற்கு இயற்கை கொடுத்திருக்கும் `கற்றாழை’ மூலிகைகளை துணையாகக் கொண்டோமானால் பயப்படத் தேவையில்லை.

`கற்றாழை’ சாதாரணமாக எங்கும் காணப்படக்கூடியது. ஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை மூலிகை.

வெயில் காலத்தில் வெப்ப சரீரமான பித்த உடம்பே அதிகம் பாதிக்கப்படுகிறது. வெயில் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கவும், உடல் வெப்பத்தைப் போக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

`கற்றாழை’

கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன.

பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. கற்றாழை என்றாலும், சோற்றுக் கற்றாழை என்றாலும் ஒன்றுதான்.

கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரி¢ச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும்.

இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.

நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும்.

சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம்.

பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.

உடல் எப்போதும் கோழி வயிறுபோல சூடாக இருப்பவர்களும் தேகத்தில் தோல் எரிச்சலாக இருக்கிறது என உணர்கிறவர்களும் சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.

உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம். இதனால் நல்ல உறக்கம், மனப் பதட்டம் குறைந்து அமைதியும் உடல் நலமும் கிடைக்கும்.

வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.

இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.

எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.