நவீனகால சூழலில் நம்முடைய உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் உடல்நலப் பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, மூன்றில் ஒரு இளைஞருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாதிப்பிற்கு நம் வாழ்வின் எந்த நிகழ்வு காரணம் என்பதை அறியா வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவற்றில் கவனிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது காணலாம்.

சோடியம் அதிகம் மிகுந்த நூடுல்ஸ் உணவு!

நம் அனைவருக்கும் நூடுல்ஸ் உள்ளிட்ட சீன உணவுகளை மிகவும் பிடிக்கும். ஆனால் அதில் சோடியம் அதிக அளவு உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த உணவுப் பொருட்களில் ஒருநாளில் நமக்கு தேவையான அளவை விட, சோடியம் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சோய் சாஸ், டெரியாகி சாஸ், பீன் சாஸ், கார்லிக் சாஸ் உள்ளிட்டவற்றில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தால் நம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

தவறான உடற்பயிற்சி!

தவறான உடற்பயிற்சி பழக்கம், அதிகப்படியான புரோட்டீன் உட்கொள்ளுதல் ஆகியவை ரத்த அழுத்தம் மற்றும் சுரப்பிகளில் அளவை அதிகப்படுத்துதலில் கொண்டு வந்து விடுகிறது. இதனால் நம் உடலிற்கு ஏற்ற உடற்பயிற்சி மற்றும் செய்ய முடிந்த செயல்பாடுகளை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பகல் நேர தூக்கம் தவிருங்கள்!

பகல் நேரங்களில் உறங்குவது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆராச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பகல் நேர உறக்கத்தால் 13-19 சதவிகிதம் வரை உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கிராடா படோனா(Grana Padano) உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. ரத்த நாளங்கள் விரிவடையச் செய்து, இதயத்திற்கு செல்லும் ரத்த அளவை அதிகரிக்க வைக்கும் மருந்துகளின் அதே செயல்பாட்டை, இந்த கிராடா படோனாவும் செய்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நமது ரத்த அழுத்தம் குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.