Better to eat with a hand than golden spoon. Why?
நம்மில் பலர் சாப்பிடுவதற்கு கையை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மேற்கத்திய முறை என்ற பெயரில் பலர் ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தி உணவு சாப்பிடும் பழக்கமும் சிலரிடம் இருக்கிறது. அது தான் நாகரிகம் என்றும் பலர் அதையே பழக்கப்படுத்தி கொள்கின்றனர்.
ஆனால், கையில் சாப்பிடுவது எவ்வளவு நல்லதுனு இதை படிங்க தெரியும்….
1.. உயிர் சக்திகளை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது:
ஆயுர்வேதத்தின் படி நமது உடம்பு ஐந்து உயிர் சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நமது கைகளில் உள்ள ஐந்து விரலும் ஐந்து பூதங்களை குறிக்கிறது. இந்த ஐந்து ஆற்றலில் ஒன்று சமநிலையில் இருந்து விலகினாலும், நமது உடம்பிற்கு கேடு விளைவிக்கும். நாம் கையினால் உணவு அருந்தும்போது, நமது அனைத்து விரல்களையும் நாம் உபயோகப்படுத்துவதால், நமது உயிர் சக்திகள் அனைத்துக்கும் ஆற்றல் அடைகிறது.
2. செரிமானத்திற்கு உதவும்:
தொடுதல் உணர்வு என்பது நமது உடம்பில் மிக முக்கியமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற உணர்வுகளில் ஒன்றாகும். நாம் கையினால் உணவு அருந்தும் போது அதில் தொடுதல் உணர்வு ஏற்படுவதால், நமது வயிற்றை அது செரிமானத்திற்கு தயாராக இருக்கும் படி நமது மூலை செய்தி அனுப்புகிறது. இதனால் செரிமானம் நன்றாக நடக்கிறது.
3. சாப்பாட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும்:
கையினால் உணவு அருந்துவதன் மூலம், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ற உணர்வு நமக்கு இருக்கும். ஏதாவது கல் போன்றவை தட்டுப்பட்டாலும் நீக்கி விடலாம். நமது கவனம் உணவில் இருக்க கையினால் சாப்பிடுவது தான் சிறந்தது.
4. உணவு சூடாக இருப்பதை அறிந்து கொள்ள:
நமது கை தான் சிறந்த வெப்பம் அறியும் கருவி. நமது கையை உணவு அருந்த பயன்படுத்துவதன் மூலம் சூடாக இருக்கும் உணவை நாம் ஆற வைத்து உண்ண உதவியாக இருக்கும். சூடாக இருக்கும் உணவை தவிர்ப்பதன் மூலம் நமது நாவினை பாதுகாக்கலாம்.
5. உணவின் சுவை தெரியும்:
கையில் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும்போது பழைய சாதமும் பஞ்சாமிர்தமாய் இனிக்கும். தங்க ஸ்பூனில் சாப்பிட்டாலும், கையில் அள்ளி சாப்பிடும் சுவைக்கு ஈடாகாது.
