Asianet News TamilAsianet News Tamil

ஒரு ஸ்பூன் நெய்!! தினமும் உள்ளங்காலில் மசாஜ் செய்தால் கிடைக்கும் நன்மைகள்!!

தினமும் பாதங்களில் நெய் தேய்த்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். 

Benefits Of Rubbing Ghee On The Soles
Author
First Published Jun 6, 2023, 1:55 PM IST

நாம் சரும அழகிற்காக பல விஷயங்களை முயற்சி செய்கிறோம். ஆனாலும் விரும்பிய பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை. உங்களுடைய சருமம் உள்ளங்காலுடன் தொடர்பு கொண்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நெய்யை வைத்து உள்ளங்கால்களை மசாஜ் செய்தால், நம் முகத்தில் அபரிமிதமான பளபளப்பு வரும் என தோல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

உள்ளங்கால்களை நெய்யால் மசாஜ் செய்வது பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத சிகிச்சை முறை. இப்படி செய்வதால் சரும நன்மைகள் மட்டுமின்றி பல பிரச்சனைகளும் நீங்கும். நீங்கள் அடிக்கடி நெய்யை சாப்பிட வேண்டும் என்றாலும் இரவில் உள்ளங்கால்களில் நெய்யை தடவினால், உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும். 

உள்ளங்காலில் நெய் பூசுவதால் நன்மைகள்: 

  • உங்களுடைய உள்ளங்காலில் நெய் கொண்டு மசாஜ் செய்வதால், முகத்திற்கு அற்புதமான பொலிவு கிடைக்கும். நிறைய சரும பிரச்சனைகளும் தீரும். 
  • இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள், தூங்கும் முன் உள்ளங்கால்களை நெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். 
  • வாழ்க்கை துணை தூங்கும் போது சத்தமாக குறட்டை விடுகிறாரா? இன்றிலிருந்து அவரின் உள்ளங்கால்களில் நெய் தடவுங்கள். குறட்டைக்கு குட் பை சொல்லுங்கள். 
  • அஜீரணம் அல்லது வயிற்றில் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் செய்யலாம்.
  • தூங்கும் முன் பாதங்களை நெய் கொண்டு மசாஜ் செய்தால், அது உங்கள் மனதை இளகுவாக மாற்றி உங்களுடைய டென்ஷனைப் போக்கும். 
  • உள்ளங்காலில் நெய் பூசுவதால் உடல் எடையை கூட கட்டுக்குள் வைக்கமுடியும். 

இதையும் படிங்க: நம்ம முன்னோர் சாப்பிட்ட சோளத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா!! அத கட்டாயம் சாப்பிட வேறென்ன காரணம் வேணும்

நெய் மசாஜ் செய்வது எப்படி?

இரவில் தூங்கும் முன்பு, நெய்யை உள்ளங்கையில் எடுத்து கொஞ்சம் தேய்த்து பின்னர் உள்ளங்காலில் மசாஜ் செய்யவும். பாதங்கள் சூடாகும் வரை நெய் தடவிக்கொண்டே இருங்கள். பிறகு படுத்தால் நல்ல தூக்கம் வரும். அதன் பலன் சில நாட்களில் தெரியும். 

நெய்க்கு பதிலாக...

நெய் விலை அதிகம். எல்லாருக்கும் தினமும் நெய் பயன்படுத்துவது சிரமமான விஷயம் தான். இதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கோகம் வெண்ணெய் பயன்படுத்தலாம். இதுவும் அதே பலன்களை தரும். 

இதையும் படிங்க: இந்த பச்சை இலைகளை தினமும் சாப்பிட்டால் 60 வயசானாலும் நோய் உடம்புல ஒரு வலி இருக்காது!!

Follow Us:
Download App:
  • android
  • ios