குழந்தை நன்கு சாப்பிட்டாலும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, சற்று ஒல்லியாக இருக்கிறது.

எனது குழந்தையும் குண்டாக, பசியை தூண்டும் டானிக் கொடுக்கலாமா? என்று குழம்பும் பெற்றோரே.

உங்கள் குழந்தையை, மற்ற குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். உங்கள் குழந்தையின் உடல் எடை, அதன் உயரத்திற்கு ஏற்ப உள்ளதா என்று கண்டறியுங்கள்.

மேலும் அது சுறுசுறுப்பாக உள்ளதா எனவும், படிப்பில் நல்ல கவனத்துடன் உள்ளதா? எனவும் கவனித்து வாருங்கள்.

குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருந்தால், அதை, "சைல்டுஹூட் ஒபிசிட்டி' என்பர்.

"சைல்டுஹூட் ஒபிசிட்டி'யால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், பிற்காலத்தில் "அடல்ட் ஒபிசிட்டி'யால் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைகளுக்கு உணவை திணிக்காதீர்கள். உடற்பயிற்சிகளை கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருந்தால் போதுமானது.

குண்டாக இருக்கத் தேவையில்லை.