Eye Care Tips: கண்கள் புத்துணர்வு பெற சிம்பிள் டிப்ஸ்!!
கம்யூட்டரில், மொபைலில் இந்த தலைமுறையினர் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர். இவர்கள் தங்களது கண்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
விளக்கெண்ணெய் மசாஜ்:
தினமும் மோதிர விரலாம் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். விளக்கெண்ணெயை கொஞ்சம் எடுத்து கண்களைச் சுற்றி வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்யவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
ஆரோக்கியமான கண்கள்:
தினசரி சாப்பிடும் உணவில் நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். கண்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்க சால்மன், டியூனா போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை உணவில் சேர்க்க வேண்டும்.
சிசேரியன் பிரசவமா? வெள்ளைப்பூண்டு வதக்கி சாப்பிடுங்க; உடம்பு ஜம்முன்னு ஆகும்.. வீட்டு டிப்ஸ்!!
சோர்வடையும் கண்கள்:
சிலருக்கு கண்கள் சோர்வாக இருக்கும் இது முகத்தையும் டல்லாக காட்டும். கணினி முன்பு தொடர்ந்து அமர்வது, போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, சரிவிகித ஊட்டச்சத்து இல்லாதது கண்களையும் சோர்வடையச் செய்யும். கருவளையம் உண்டாவதற்கும் இதுதான் காரணம்.
கருவளையம் போக டிப்ஸ்:
சிலருக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து துணியில் வைத்து கண்களில் வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.
உணவுக்கு பிறகு பெருஞ்சீரகம் சாப்பிட சொல்றாங்களே.. அது ஏன் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
ஓய்வு அவசியம்:
கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, கண்களைப் பராமரிப்பது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும். கண்கள் சோர்வுறும் போது ஓய்வு எடுங்கள். கம்ப்யூட்டரை தொடர்ந்து பார்த்தால், கண்களை இமைக்க மறந்துவிடுவோம். இதனால், கண்களுக்கு போதிய நீர்ச் சத்து கிடைக்கும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கண்களை மூடி மூடி திறக்கவும். பின்னர் 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளை ஊற்று கவனிக்கவும்.