Asianet News TamilAsianet News Tamil

டயாலிசிஸ் செய்பவர்கள் இவற்றில் மிகவும் கவனாமக இருக்கவும். 

Be very careful of dialysis.
Be very careful of dialysis.
Author
First Published Jan 31, 2018, 2:08 PM IST


** மனித உடலின் ஆதாரசுருதியாக திகழும் சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக உள்ளது. 

** சிறுநீரகம் பழுதையடுத்து ரத்தஅழுத்தம் உள்பட உடலின் பல செயல்பாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். 

** உள்சிறுநீர்குழாய்களின் அடைப்புக்கு முக்கிய காரணம், சிறுநீரக கற்கள்தான்.

** முதுகு - வயிற்றில் அதிக வலி, சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் ரத்தம் வருதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். 

** சிறுநீர்ப்பையின் அடியில் உள்ள ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கி சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறுவதை தடைசெய்யும். 

** எலும்பு மஜ்ஜையில் இருந்து ரத்தசிவப்பணுக்களை உண்டாக்க உதவும் எரித்ரோபாயிட்டின் என்கிற நொதியை சிறுநீரகங்களே உற்பத்தி செய்கின்றன. 

** சிறுநீரக செயலிழப்பால் இரத்த சோகை உண்டாகும். 

** எலும்புகளை உறுதியாக வைத்திருக்கும் கால்சிட்ரியால் என்கிற சத்தையும் சிறுநீரகமே உற்பத்தி செய்கிறது.

** சிறுநீரக செயலிழப்பால் எலும்புகள் பலமிழக்கும். 

** சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது 12 மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலை. 

** இதை சாதாரணமாக உடனே கண்டு பிடித்துவிட முடியாது. நோய் முற்றிப்போன நிலையில் கூட அதற்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படாமல் இருப்பதுதான், சிறுநீரகசெயலிழப்பு நோயின் மோசமான தன்மை! ஒரு சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்தாலும் கூட, எஞ்சிய மற்றொன்று தொடர்ந்து செயல்படுவதால் இந்த நிலை.

** நோய் முற்றியோருக்கு சிறுநீரகங்களை ஸ்கேன் செய்து பார்த்தால் மாங்காய் அளவு இருக்கவேண்டிய இடத்தில் சுருங்கிப்போன பீன்ஸ் விதை அளவு மட்டுமே சிறுநீரகங்கள் இருக்கும்.

** உங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரின் அளவுக்கேற்ப ஊட்டச்சத்து மிக்க பால், சூப், பாயசம் போன்ற திரவங்களாக குடிக்க முயற்சி செய்யுங்கள். டீ, காப்பி, குளிர்பானங்கள் வேண்டாமே. தாகமான நேரத்தில் எலுமிச்சை பழத்தை வெட்டி சப்பலாம், அல்லது குளிர்ந்த நீரை வாயில்விட்டு கொப்பளித்து துப்பி விடவேண்டும், விழுங்கக் கூடாது.

** மாத்திரை-மருந்துகளை குறைந்த நீரில் சாப்பிடுங்கள். சூடான உணவு திரவங்களை தவிர்க்கவும். உடம்பை முடிந்தவரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும். நிரந்தர சிறுநீரக செயலிழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகதான் ஏற்படுகிறது.

** ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்துவது சுலபம். காலம் கடந்தபிறகு கண்டறிந்தால், மருத்ததுவரால்கூட கிட்னி பாதிப்பை சரிசெய்ய முடியாது.

Follow Us:
Download App:
  • android
  • ios