Asianet News TamilAsianet News Tamil

வலிப்பு நோயில் இருந்து விடுபட வாழைப்பழம் சாப்பிடணுமாம் – ஆய்வு சொல்லுது…

Bananas eat from epilepsy - study says ...
Bananas eat from epilepsy - study says ...
Author
First Published Jul 25, 2017, 1:40 PM IST


தினமும் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் வலிப்பு நோயில் இருந்து விடுபடலாம் என்று இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“வலிப்பு நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் இங்கிலாந்து மற்றும் இத்தாலியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இதில் பொட்டாஷியம் சத்து ரத்தத்தை ஆரோக்கியமாக்கும் என்பதுடன் ரத்தம் உறைதலை தடுக்கிறது என்று கண்டுபிடித்தனர். இதனால் அன்றாடம் காலை, மதியம், இரவு என 3 வேளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட்டால் வலிப்பு நோயை தடுக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறியுள்ளனர்.

ஏனெனில் ரத்தம் உறைவதால் வலிப்பு நோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். வாழைப் பழத்தில் உள்ள பொட்டாஷியம் சத்து ரத்தம் உறைவதை தடுக்கும். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவி மூளைக்கு செல்லும் ரத்தம் பாதிப்படைவதை தடுக்கும்.

மூளை மற்றும் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருந்தால் நோய் தாக்குதல் இருக்காது. வலிப்பு நோய் தாக்குதலில் இருந்து வாழைப் பழம் உள்ளிட்ட பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் 21 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது என்று தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ரத்தத்தில் உள்ள குறைபாட்டை நீக்குவதில் பொட்டாஷியத்துக்கு அதிக பங்கு உள்ளது. இந்த சத்து அதிகம் உள்ள கீரை வகைகள், பால், முந்திரி, பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள், மீன், மொச்சை, பயிறு போன்ற தானிய வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios