bad ham solve heart problems



கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு நல்ல கொழுப்பு தேவை. வேலையும், கவலையும் அதிகம் என்றால் பாதாம் பருப்புகளையே தொடர்ந்து சாப்பிடலாம்.பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு உள்ளது. குளுட்டாமிக் அமிலமும் அதில் உள்ளது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

 

பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும்கூட "டைப் 2' நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறது. பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் வரவே வராது.

பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய் உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகிறது.