baby avoid feeding milk why...?
பிறந்தது முதல் ஆறு மாத குழந்தைக்கு பால் மட்டும் உணவு இருக்கிறதென்றால் அதனை குழந்தை குடிக்க மறுத்தால் கண்டிப்பாக குழந்தை நல மருத்துவரை உடனே அணுகுதல் அவசியம். கைக்குழந்தை பால் குடிக்க மறுக்கும் நிலை தாய்க்கு பிரச்சனையாகவும், கவலை அளிக்க கூடியதாகவும் இருக்கும். இந்நிலைமை ஏற்பட்டால் குழந்தைக்கு எதும் உடல் நல பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்

இத்தகைய சூழல் திடீரென உருவாகி இருக்குமானால், ஏதேனும் பிரச்சனை என்றோ, உங்கள் குழந்தை ஏதோ அசௌகரியமாக உணர்கிறது. எனவே பால் அருந்த மறுத்திருக்கலாம். ஆனால் இப்பிரச்சனை பிறப்பிலிருந்தே நிலவி வருமானால், குழந்தைக்கு தாயின் மார்பிலிருந்து பால் அருந்துவதில் ஏதோ பிரச்னை இருப்பதாகவே அர்த்தம். சில வேளைகளில் பிறந்தவுடன் தாயின் முளைக்காம்பைப் பற்றி பால் அருந்தும் செயலைத் தொடங்குவது குழந்தைக்கு சிரமமாக இருக்கும். சில சமயங்களில் முதல் சில தடவைகளில் சாதாரணமாக பால் அருந்திய குழந்தை போகப் போக அது பால் அருந்த கற்றுக்கொள்ளும் சமயத்தில் சில நேரம் பால் அருந்த மறுக்கலாம்.

குழந்தை பிறப்பில் இருந்து பால் புகட்டுவதில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி பல நாட்கள் கழிந்த பின்னரும் கூட இப்பிரச்சனை எழலாம். இதற்குப் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் நிறைய உள்ளன. காரணத்தை கண்டறிந்தால் பிரச்னையை சரி செய்யலாம்.
