Asianet News TamilAsianet News Tamil

கணினியில் வேலை பார்ப்பவரா நீங்கள்? உங்கள் கண்களைப் பாதுகாக்க இதோ சில அட்டகாசமான டிப்ஸ்...

Are you working on the computer? Here are some cool tips to protect your eyes ...
Are you working on the computer? Here are some cool tips to protect your eyes ...
Author
First Published Jan 12, 2018, 12:52 PM IST


கணினியில் வேலை பார்ப்பவரா நீங்கள்? உங்கள் கண்களைப் பாதுகாக்க இதோ சில அட்டகாசமான டிப்ஸ்...

** தொடர்ந்து இடைவிடாமல் கணினியில் உட்கார்ந்துகொண்டு வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். கணினியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு கண்கள்தான்.

** அடிக்கடி கணினி திரை சிமிட்டுவதால்தான்  கண்களுக்குப் பிரச்சனையே உண்டாகிறது. தொடர்ந்து இவ்வாறான ஒளிகளை கண்கள் சந்திப்பதால் உடலில் மிகுந்த சோர்வுக்கு ஆளாகிறது.

** அடிக்கடி ஒளிரும் கணினித் திரையால் உடலில் உள்ள உணர்ச்சி மண்டலம், புலன் உணர்வு மற்றும் மூளை போன்ற நரம்பு தொடர்பான உறுப்புகளும் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகின்றன.

** உடல் அதிக சிரமத்திற்கு உள்ளாவதால்தான் மனதும் சோர்வடைந்து மன இறுக்கம் ஏற்படுகிறது. 


** மனச்சோர்வு, உடல் சோர்வு, கண்கள் சோர்வடைவதை தடுப்பது எப்படி என்பதை அமெரிக்க மருத்துவரான ஜூடிட் மாரிஸன் சில வழிமுறைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். பெண் மருத்துவரான இவர் ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதுமாக பூசி மசாஜ் செய்ய சொல்கிறார்.

** முழங்கை தொடங்கி விரல் நுனிகள் வரை நல்லெண்ணையை தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

** சில நேரம் கணனியின் இயக்கத்தை நிறுத்திவிட்டோ அல்லது எழுந்து வெளியில் சென்று ஐந்து நிமிடமாவது பேசுவதும் நல்லது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது இப்படி  ஓய்வு எடுத்தால் உடலும், மூளையும் ஒரு சீரான நிலைக்கு திரும்பும்.

** அவ்வப்போது உங்கள் கைவிரல்களை நீட்டி மடக்கலாம். நீங்கள் உங்கள் கை விரல்கள், மற்றும் கைகளை இலேசாக அழுத்தி மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

** கணனி இருக்கையில் உட்கார்ந்தவாறே கூட உங்கள் கண்களுக்கு நீங்கள் ஓய்வளிக்கலாம். உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான்கு புறமும் கண்களை சுழற்றுவதன் மூலம், ஒரு நேர்க்கோட்டுப் பார்வையில் வேலை செய்த உங்கள் கண்களும், கண் தசை நார்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கலாம். இயல்பு நிலைக்கு கண் தசைநார்கள்(Eye ligaments) திரும்புவதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, அழற்சி நீங்கும்.

** கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், அக்கவுண்டன்ட், முழுநேர பதிவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறலாம். 

** இரவில் இந்த நல்லெண்ணை மசாஜ் செய்துகொள்ளலாம். பகலில் கைவிரல்கள், தோள்பட்டை, பின்னங்கழுத்து, முதுகுத் தண்டு ஆகியவற்றை நீங்களே  இலேசாக நீவிக்கொள்வதன் மூலம் வலிகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios