இக்காலத்தில் மலச்சிக்கல் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு தீராத பிரச்சினை. மலச்சிக்கல் சரியாக அற்புதமான தமிழ் மருந்துகள் நிறைய உள்ளன.

மலச்சிக்கல் சரியாக சுக்கு மருந்து

நாம் குடிக்கும் நீரை தினமும் கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை குடிப்பது நலம் தரும். அவ்வாறு குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டி அதில் போடலாம். அப்படியே குடிக்க முடியாவிட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். பல அருமையான மருத்துவ குணங்களைக் கொண்ட சுக்கு மலச்சிக்கலை முற்றிலுமாக குணபடுத்தும்.

மலச்சிக்கல் சரியாக கடுக்காய் மருந்து

மலச்சிக்கல் சரியாக அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடிக்க வேண்டும். ஒரு பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். கடுக்காய் பொடி கலந்த நீரை குடிப்பதால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இந்த கடுக்காய் பொடி மருத்துவத்தை தினம் செய்து வந்தால் மலச்சிக்கல் காணாமல் போய் விடும்.

மலச்சிக்கல் சரியாக வாழைப்பழம் மருந்து

ஆம். மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் ஒரு எளிமையான அருமருந்து. மலச்சிக்கல் உள்ளவர்கள் மலச்சிக்கல் சரியாக தினமும் இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.