Asianet News TamilAsianet News Tamil

சுளுக்கு நீக்கும் மூசாம்பரம்…

aloe vera-removing-sprains
Author
First Published Dec 23, 2016, 2:46 PM IST


சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம் இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம்.

இது, கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கருமை நிறத்தில் பிசின் போன்று இருக்கும். அடிபட்ட வீக்கம், நரம்புப்பிறழ்வு, சுளுக்குச் சதைச்சிதைவு ஆகிய நிலைகளில் மூசாம்பரத்தை வெந்நீரில் கரைத்துக் குழம்புப் பக்குவத்தில் இளஞ்சூட்டில் பூசினால் குணமாகும்.

2 கிராம் மூசாம்பரத்துடன் 5 கிராம் குல்கந்து சேர்த்து அரைத்து காலை, மாலை இருவேளை உணவுக்குப் பிறகு ஐந்து நாட்கள் உண்டு வந்தால், முறை தவறிய மாதவிடாய், குறைந்த மாதவிடாய் ஆகியவை குணமாகும்.

கரியபவளம் கசப்பாகவும், குமட்டலான மணத்துடனும் இருப்பதால் குல்கந்து சேர்த்து சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் இதை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

Follow Us:
Download App:
  • android
  • ios