After 30 with these tips you can be young
வயது ஏறிக் கொண்டே வரும்போது கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும். அதுவரை தோலிற்கு பிடிமானமாக இருந்த கொழுப்பு குறையும்போது, சருமம் தளர்வாக ஆரம்பிக்கும். இதனால்தான் வயதான தோற்றம் தருகிறது.
இதனை தடுக்க சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் நல்ல புரத உணவுகளும், சருமத்தை இறுகும் பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ செய்முறைகளை செய்தால் சருமம் இளமையாகவே காப்பாற்றப்படும்.
** முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவை கலந்து முகத்தில் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிரிந்த நீரில் கழுவுங்கள். இந்த குறிப்பு சருமத்தில் புதிய செல்கள் உருவாவதற்கு தூண்டும். இது தளர்வடைந்த சருமத்தை இறுக்கி சுருக்கம் கருமை ஆகியவற்றை மறையச் செய்யும்.
** முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் மசித்த அவகாடோவின் சதைப் பகுதி மற்றும் 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால் முகம் சுருக்கமின்றி அழகாய் இருக்கும்.
** முட்டையில் வெள்ளைக் கருவுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும்.
** முட்டையில் வெள்ளைக் கருவுடன் 2 ஸ்பூன் கடலை மாவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். காய்ந்ததும் கழுவுங்கள்.
** முட்டையின் வெள்ளைக் கருவுடன் முல்தானி மட்டியை கலந்து பேக்காக முகத்தில் போடவும். சருமம் நன்றாக இறுகியவுடன் கழுவுங்கள்.
** கேரட்டை துருவி சாறெடுத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் போடவும்.
