உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மனிதன் சோம்பேறி ஆக்கப்பட்டான். வேலை நேரம் மாறியது, சாப்பிடும் நேரம் மாறியது, தற்போது தூங்கும் நேரத்திலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதனால் எத்தனை விளைவுகள் இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்?

இரவு நேரத்தில் கணினி முன் அமர்ந்து வேலை பார்த்தால்... லட்சத்தில் சம்பளம்... ஆடம்பரமாக வாழலாம்... ஆனால் ஆரோக்கியமாக வாழமுடியுமா என்பதை சற்றும் மறந்து விடுகின்றனர் தற்போதைய இளைஞர்கள். 

ஒரு மனிதன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவன் எடுத்துக்கொள்ளும் உணவு மட்டும் முக்கியமல்ல, இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூதங்களும் தான் காரணம். 

சூரிய உதயத்தின் போது எழுந்து... சூரிய ஒளி நம்மேல் படும்படி நின்றால் விட்டமின் டி குறைபாடு வராது என்பது, தெரிந்தும் வேலை செய்யும் எத்தனை இளைஞர்கள் இதனை செய்கின்றனர்?

நேரம் கடந்து தூக்கம்:

தற்போது  இளைஞர்கள் மட்டும் அல்ல பொதுவாக பலர் நேரம் கடந்து தூங்கும் பழக்கத்தை உடையவராக தான் உள்ளனர். இப்படி நேரம் கடந்து தூங்குவதால் அவர்களுக்கு என்ன என்ன பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என்பதை பாப்போம்.

சிலர் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும், தன்னுடைய உடலுக்கான ஓய்வு கிடைத்து விட்டதாக நினைகின்றனர். ஆனால் நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பது முக்கியமில்லை. சரியான நேரத்திற்கு தூங்குகிறோமா என்பது மட்டுமே கவனிக்கப்பட வேண்டியது என கூறுகின்றனர் மருத்துவர்கள்.

மேலும் உலகில் உள்ள ஒட்டு மொத்த உயிரினங்களும், சூரிய ஒளியை மையமாக வைத்து தான் இயங்குகிறது ஆனால் மின்சார ஒளி என்பதை கண்டுபிடித்த பிறகு மனிதன் மட்டுமே அந்த பாதையில் இருந்து விலகியுள்ளதாக கூறும் மருத்துவர்கள் இப்படி சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பதால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளதாக அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

ஹோர்மோன் சுரப்பு:

பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் இரவில் தூங்கும் போது மட்டுமே சுரக்கும் ஒரு ஹோர்மோன் 'மெலடோனின்' இது நல்ல இருட்டில் தூங்கும் போது மட்டுமே சுரக்கும். ஆனால் தற்போது பலர் நேரம் கடந்து தூங்குவதால் அவர்களுடைய உடலில் இந்த ஹோர்மோன் சுரப்பதில்லை. 

இதை மாத்திரை மருந்துகளால் சுரக்க வைக்க முடியாது என்றும், இதனால் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும், இவர்களை கருப்பு கண்ணாடிகள் போட்டு தூங்கும்படி மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகிறதாம், மேலும் புற்று நோய் வருவதற்கு மிக முக்கிய காரணமாக இந்த தூக்கமின்மை மற்றும் நேரம் கடந்த தூக்கம்.

சிறு செரிமான கோளாறு பிரச்சனையில் துவங்கும் இதன் அறிகுறி உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு உருவெடுக்கும் என அறிவுருதுகின்றனர் மருத்துவர்கள்.