Turmeric Milk: மஞ்சள் பாலில் இந்த மூன்று பொருட்களை சேர்த்தால் அற்புத பலன்கள் கிடைக்கும்!
மஞ்சள் பாலில் எதனை எல்லாம் சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
புரதச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருள் பால். பாலுடன் மஞ்சளை சேர்த்து குடித்தால், இன்னம் பல பலன்கள் நமக்கு கிடைக்கும். பொதுவாகவே மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. ஆகையால் தான் அனைத்து விதமான உணவுகளிலும் மஞ்சளை சேர்க்கின்றனர். இதில் இருக்கும் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பல்வேறு நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. மஞ்சளை அடிக்கடி எடுத்துக் கொள்வது, உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதோடு, அளவை மீறி எடுத்துக் கொள்ள கூடாது. பிறகு, அதுவே ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதை மறக்க வேண்டாம்.
மஞ்சள் பால்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பலரும் பரிந்துரை செய்கின்றனர். மேலும் பல நன்மைகளை பெற வேண்டுமானால், சில வகை நட்ஸ்களை மஞ்சள் பாலுடன் கலந்து குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது மஞ்சள் பாலில் எதனை எல்லாம் சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சளிப் பிரச்சனை மற்றும் காய்ச்சலைத் தடுக்க தினந்தோறும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில், ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பலரும் பரிந்துரை செய்கின்றனர். தூங்குவதற்கு முன்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது, நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
மஞ்சள் பாலில் பாதாம்
அரைத்த பாதாம் அல்லது பாதாம் பேஸ்ட்டை மஞ்சள் பாலில் சேர்த்துக் குடிக்க வேண்டும். பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்திருப்பதால், இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மஞ்சள் பாலில் அத்திப்பழம்
மஞ்சள் கலந்த பாலுடன் அத்திப்பழத்தை சேர்த்துக் குடிக்கலாம். இந்த சூடான பானத்தில் மெலடோனின் மற்றும் டிரிப்டோபன் எனப்படும் கலவைகள் இருப்பதன் காரணணத்தால், உங்களின் தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது.
Skipping: ஸ்கிப்பிங் பயிற்சி ஒன்றே போதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள!
மஞ்சள் பாலில் பேரிச்சை
மஞ்சள் பாலில் பேரிச்சை சேர்த்துக் குடிக்கலாம். இதில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல தாதுக்கள் அதிகமாக நிறைந்திருப்பதால், இரத்த சர்க்கரை அளவையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும், இந்த உலர்ப் பழமானது மூட்டு வலியைப் போக்கவும் உதவி செய்கிறது.