Asianet News TamilAsianet News Tamil

உடல் எடையை குறைக்கனுமா? சீரகம் இருக்கு, கவலை எதுக்கு?

Cumin controls weights
a cumin-cures-weights
Author
First Published Mar 15, 2017, 2:21 PM IST


 

உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருளான சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவும்.

அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

சீரகத் தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சீரகத் தண்ணீர் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். சீரகத் தண்ணீரின் மருத்துவ குணம் அறிந்த கேரளத்து மக்களின் அன்றாட குடிநீரே சீரகத் தண்ணீர் தான்.

1..ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சே ர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தினமும் குடித்து வர வேண்டும்.

2.. சீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

3.. அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், அது 4.. இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.

5.. சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

6.. நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்கள் நம் உடலில் எளிதாக நுழைகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.

7.. தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

8.. சீரகத் தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios