விபத்தில் மூளைச் சாவு அடைந்த 28 வயதுடைய வாலிபரின் இதயம் செகந்திராபாத்தில் இருந்து பஞ்சாகுட்டாவில்  உள்ள நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு  57 வயது நபருக்கு பொருத்தப்பட்டது. உயிருடன் துடித்துக்கொண்டிருந்த இதயத்தை  எட்டு கிலோமீட்டர் தூரம் 

விபத்தில் மூளைச் சாவு அடைந்த 28 வயதுடைய வாலிபரின் இதயம் செகந்திராபாத்தில் இருந்து பஞ்சாகுட்டாவில் உள்ள நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு 57 வயது நபருக்கு பொருத்தப்பட்டது. உயிருடன் துடித்துக்கொண்டிருந்த இதயத்தை எட்டு கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆம்புலன்ஸ் டிரைவர் பத்திரமாக கொண்டு சேர்த்தார். 

சமீபகாலமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் மாற்று அறுவைச் சிகிச்சை எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது. இதற்கு இத்தனை ஆண்டுகளாக மருத்துவத்துறை மேறக்கொண்டு வந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களே முக்கிய காரணமாகும்.

விபத்தில் மூளைச் சலவை அடைபவர்களின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது. இந்த வரிசையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மூளைச்சாவு அடைந்த 28 வயதுடைய இளைஞரின் இதயம் 57 வயது நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: நெல்லையில் பதற்றம்; பேருந்தை கொளுத்திய ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள்?

முழு விவரம் பின்வருமாறு அக்டோபர் 4ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மேடக் மாவட்டம் சங்கரன் பேட்டை மண்டலத்தை சேர்ந்த நாகராஜ் (28) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அதன்பிறகு அவர் தீவிர சிகிச்சைக்காக செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த இலையில் அவர் கோமாவுக்கு சென்றார்.

இதையும் படியுங்கள்: மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கினால் ஆப்பு தான்.. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துறை எச்சரிக்கை.!

இந்நிலையில் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர்கள் குழு அவர் மூளைச்சலவை அடைந்ததாக அறிவித்தனர். இந்நிலையில் ஜீவந்தன் தொண்டு நிறுவன அதிகாரிகள் அவரது குடும்பத்தினருடன் நடத்திய தொடர் ஆலோசனை மூலம், உயிரிழந்த நாகராஜன் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் பலருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது, வெள்ளிக்கிழமை காலை 9:35 மணி முதல் காலை 9: 45 மணிக்கு இடையில் யசோதா மருத்துவமனையில் இருந்த நாகராஜன் இதயம் பஞ்சகுட்டாவில் உள்ள நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் உள்ள 57 வயது நபருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தின் படி மூளைச்சாவு அடைந்த நாகராஜன் இதயம் செகந்திராபாத் யசோதா மருத்துவமனையிலிருந்து பஞ்சகுட்டா நிஜாம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

நேரம் தவறக்கூடாது என்பதால் முன்னதாக போக்குவரத்து போலீசார் ஆம்புலன்ஸ் எந்த தடையும் இன்றி செல்லும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கிரின் சேனல் ஏற்படுத்தினர். எனவே திட்டமிட்டபடி உயிருடன் இருந்த இதயம் யசோதா மருத்துவமனையிலிருந்து நிஜாம் மருத்துவமனைக்கு கிரீன் சேனல் வழியாக அதிவிரைவாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட நபருக்கு இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. டாக்டர் அம்ரிஷ் ராவ் தலைமையிலான மருத்துவர் குழு இதை வெற்றிகரமாக செய்தது குறிப்பிடத்தக்கது.