Asianet News TamilAsianet News Tamil

இதயத்தை பாதுகாக்க 10 எளிய யோசனைகள்…

10 simple-ideas-to-protect-the-heart
Author
First Published Dec 31, 2016, 2:04 PM IST


1. புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

2. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

3. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

4. உடல் எடை குறைவு – சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

5. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

6. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

7. பிரஷ் ஆக உள்ள காய் மற்றும் பழங்கள் தினமும் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் – பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன. அவற்றை உண்பதை தவிர்க்கவும்.

8. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

9. உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

10. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios