இந்த ஒரு ஜூஸ 14 நாட்கள் குடிச்சு பாருங்க!தொப்பை இருந்த இடம் தேடினாலும் கிடைக்காது.

தொப்பையை குறைக்கும் க்ரீன் ஜூஸ் எப்படி செய்ய வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும் போன்ற தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

Natural Green Juice to reduce Belly

நம்மில் அனைவருக்கும்காலை காலை எழுந்தவுடன்டீ, காபி போன்றவற்றை குடித்து விட்டு தான் அடுத்த வேலையே துவங்குவோம்.
இதனை குடிப்பதால் புத்துணர்ச்சியாக இருக்குமே தவிர பெரிய அளவில் எந்த ஒரு பயனும் இல்லை. மேலும் பலர் இதனை குடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோடு இருக்கிறார்கள்.

இப்படி இந்த டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்திற்கு மாறாக சத்தான ஜூஸுடன் உங்கள் காலையை தொடங்குங்கள். இதனை குடித்து வருவதால் உங்கள் உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இன்று பலரும் அவதிப்படும் பிரச்சனையான தொப்பை இருந்த இடம் காணாமல் போகும். தொப்பை இருந்த இடத்தை தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

தொப்பையை குறைக்கும் ஜூஸ் எப்படி செய்ய வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும் போன்ற தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

சுரைக்காய் ஜூஸ்:

நீர்ச்சத்து அதிகமாக உள்ள சுரைக்காயில் இரும்புச்சத்து , சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகளவில் காணப்படுவதால் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்தால் உடலில் இருக்கும் அமிலங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றது.

தேவையான பொருட்கள்

சுரைக்காய் - 1 கப்
செலரி - 1 கப்
வெள்ளரிக்காய் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1/2 பழம்
புதினா இலைகள் - 5
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

ஜூஸ் செய்வது எப்படி :

சுரைக்காய் சுரைக்காய்,வெள்ளரிக்காய் மற்றும் செலரி ஆகியவற்றை முதலி அலசி விட்டு பின் ஒரே மாதிரியான அளவில் வீதி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இவைகளை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து அதனை ஒரு வடிகட்டி க்ளாசில் ஊற்றி சிறிது லெமன் ஜூஸ், சீரகத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்தால் க்ரீன் ஜூஸ் ரெடி!

எப்போது பருக வேண்டும்:

இந்த க்ரீன் ஜூஸை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் குறிப்பாக வயிற்றை சுற்றி கொழுப்பு அனைத்தும் கரைந்து தொப்பை முழுமையாக காணாமல் போவதை நீங்கள் காணலாம். தவிர கபம், பித்தம் மற்றும் வாதம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும். அதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் கல்லீரல் அழற்சி பிரச்சினையையும் சரி செய்யும்.  இந்த ஜூஸ் செய்ய பயன்படும் அனைத்தும்  நீர்சத்துக்கள் கொண்ட காய்கள் .ஆதலால் இதனை இந்த சம்மரில் இந்த ஜூஸ் செய்து தொப்பையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடலையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios