தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கி வரும் பரபரப்பான நாயகி ஏற்கனவே 2 முறை, காதல் தோல்வி அடைந்தவர். மூன்றாவதாக அவருக்கு ஒரு இளம் இயக்குனருடன் காதல் ஏற்பட்டது . இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

 இந்த நிலையில் நடிகைக்கும் இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகையின் கவனம் இப்போது அந்த இளம் கதாநாயகன் பக்கம் திருப்பி இருப்பதே கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்கிறார்கள். (இளம் நாயகன் தனது படங்களுக்கு அந்த நடிகையின் பெயரை சிபாரிசு செய்வதாகவும், இதனால் வீட்டில் பிரச்சினை என்றும் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரே வாரத்தில்... டும் டும் டும்!

"பிரிவோம்  சந்திப்போம் " என்று அடிக்கடி கூறிவரும் நட்சத்திர காதல் ஜோடி, அடுத்த வாரம் திடீர் என திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக புதிதாக ஒரு தகவல் பிறவி இருக்கிறது. " இந்த தகவல் நூறு சதவீதம் உண்மை" என்கிறார் தாடி வைத்த ஒரு தயாரிப்பாளர்.