முன்னாள் காதல் ஜோடி நடிக்கும் இரெண்டெழுத்து படத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது. அந்த முன்னாள் காதல் ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பது தான் இதற்கு காரணம்.

சர்ச்சைக்குரிய தகவல்கள் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமையும் என்பதை அந்த நாயகி இப்போது தான் புரிந்து கொண்டாராம்.

அதைத்தொடர்ந்து அந்த நாயகி சர்ச்சிக்குரிய கதைகளில் துணிச்சலாக நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறார் . தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் "சர்ச்சைக்குரிய கதை இருக்கிறதா... அதை முதலில் சொல்லுங்கள் என்கிறாராம். 

நடிகை பற்றிய பரபர தகவல்:

மும்பையை சேர்ந்த நான்கு எழுத்து,  நடிகை ஒரு இந்தி நடிகரை திடீர் என காதல் திருமணம் செய்து கொண்டதாக, கடந்த வரம் ஒரு பரபரப்பு தகவல் திரையுலகில் பரவியது. 

தற்போது இது குறித்து விசாரித்து பார்த்ததில், அந்த தகவல் முழுமையாக வதந்தி என தெரிய வந்துள்ளது, நடிகை காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் அன்று துருக்கி நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்தாராம்.