காதலை சொல்:

இரண்டெழுத்து நாயகன் 'அங்காடி' நடிகையின் காதலை முறித்துக்கொண்டாக பேசப்படும் தகவலில் உண்மை இல்லையாம். இருவரும் உட்கார்ந்து பேசி எடுத்த முடிவு தான் இது, என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள்.

"நீயும் நானும் காதலர்கள் என்று வெளியே தெரிந்தால் , எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விடும். அதனால் இருவரும் பிரிந்து விட்டதாக சொல்வோம் அது தான் இருவருக்குமே நல்லது" என்று காதலி கூறியதை காதலர் மனப்பூர்வமாக ஏற்று கொண்டு அப்படியே நடந்து கொள்கிறாராம் நடிகர். 

உறுதியாக இருக்கும் நடிகர்:

முழு நேர நடிகராகி விட்ட இசையமைப்பாளர் இனிமேல் சொந்த படம் தயாரிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் இசை நடிகர் தனது சம்பளத்தை 3 கோடியில் இருந்து 4 கோடியாக உயர்த்தி விட்டாராம்.