3-ம் உலக போர்; இயற்கை பேரழிவுகள்; 2025 குறித்து பிரபல தீர்க்கதரிசியின் பகீர் கணிப்புகள்!
2025-ஆம் ஆண்டிற்கான பல அதிர்ச்சிகரமான கணிப்புகளை பிரபல ஜோதிடர் நிக்கோலஸ் அவுஜுலா முன்னறிவித்துள்ளார். மூன்றாம் உலகப் போர் தொடக்கம், சுற்றுச்சூழல் பேரழிவுகள் மற்றும் ஆய்வகங்களில் மனித உறுப்புகள் உருவாக்கம் போன்ற முக்கிய நிகழ்வுகளை அவர் கணித்துள்ளார்.
2025 Predictions
நாஸ்ட்ராடாமஸ் பாபா வாங்கா போன்ற பிரபலமான தீர்க்கதரிசிகள் 2025 ஆம் ஆண்டிற்கான பல கணிப்புகளை முன்னறிவித்துள்ளனர்.. 2025 ஆம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில், பிரபல, ஜோதிடர் நிக்கோலஸ் அவுஜுலா பல அதிர்ச்சிகரமான கணிப்புகளைச் செய்துள்ளார். முன்னதாக இவர் கோவிட் 19 தொற்றுநோய், டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் பிற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னதாக துல்லியமாக கணித்திருந்தார்.
Nicholas Aujula Predictions
38 வயதான Aujula, லண்டனை தளமாகக் கொண்ட ஹிப்னோதெரபிஸ்ட் மற்றும் ஜோதிடர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர் ஆவார். அவர் 2025 ஆம் ஆண்டிற்கான திடுக்கிடும் கணிப்புகளைச் செய்துள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோய், டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்ததாகக் கூறுகிறார்.
மூன்றாம் உலகப் போர் 2025 இல் தொடங்கும்
2025 ஆம் ஆண்டில், 3-ம் உலக போர் தொடங்கும் என்று அவர் கணித்துள்ளார். உலகம் மக்களிடையே இரக்கம், பச்சாதாபம் இல்லாத நிலை ஏற்படும்.. மேலும் மூன்றாம் உலகப் போர் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
2025 இரக்கமே இல்லாத ஆண்டாக இருக்கும். மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் கழுத்தை அறுத்துக் கொள்வார்கள். அரசியல் கொலைகள் நடக்கும். தீமையும் வன்முறையும் அதிகமாக நடக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
Nicholas Aujula Predictions
பூமியின் பழிவாங்கல்
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கு பூமி பழிவாங்கும் என நிக்கோலஸ் அஜுலா கணித்துள்ளார்.. காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் மனிதகுலத்திற்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறி உள்ளார்.
மனித உறுப்புகள் விரைவில் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும்
அஜுலாவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில், அறிவியலில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். குறிப்பாக இந்த ஆண்டு ஆய்வகங்களில் மனித உறுப்புகளை உருவாக்கப்படும் என்று கணித்துள்ளார்.
Nicholas Aujula Predictions
2025 ஆம் ஆண்டில், பிரபல அமெரிக்க பாடகர் கேட்டி பெர்ரி திருமண பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும், ஆஸ்திரேலிய நடிகை கேட் பிளான்செட் பல விருதுகளை வென்று என்றும், அவௌர்க்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்றும் நிக்கோலஸ் கணித்துள்ளார்.
அதிக மழைப்பொழிவால் பேரழிவுகரமான வெள்ளத்திற்கு வழிவகுக்கும். இந்த வெள்ளம் மில்லியன் கணக்கான வீடுகளை அழிக்கும், எண்ணற்ற மக்கள் இடம்பெயர்வார்கள். கடல் மட்டம் உயர்ந்து, முழு நகரங்களையும் மூழ்கடிக்கும் என்றும் கணித்துள்ளார்.