UAE Golden Visa | இந்தியாவை விட்டு வெளியேரும் 4300 மில்லினியர்கள்? எங்க போக போறாங்க தெரியுமா?
நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு உகந்தாக துபாய் நகரம் மாறியுள்ளது. இதுவே இந்திய பணக்காரர்களின் நம்பர்-1 தேர்வாக உள்ளது. நடப்பு ஆண்டில் சுமார் 4300 மில்லினியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என ஹென்லி & பார்ட்னர்ஸ் அறிக்கை கூறுகிறது.
வெளிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அமெரிக்கா, லண்டன் என்றிருந்த நிலை மாறி துபாய் முதலிடம் பிடித்து வருகிறது. இந்திய பணக்காரர்களின் முதல் மற்றும் முக்கியத் தேர்வாக துபாய், ஐக்கிய அமிரகம் உள்ளது. Forbes-ன் 2024ம் ஆண்டுக்கான முக்கிய நகரங்கள் பட்டியலில் நியூயார்க், மியாமி மற்றும் பாரிஸ் போன்ற நகரங்களை முந்தி, டிராவலர்களுக்கு பிடித்த இடமாக துபாய் மாறியுள்ளது. ஹென்லி & பார்ட்னர்ஸின் அறிக்கையின் படி ஐக்கிய 4 ஆயிரத்து 300 மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
முக்கியத்துவம் பெறும் துபாய்? காணம் என்ன்??
துபாயில் வானத்த தொடும் கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர விடுதிகள் மற்றும ஷாப்பிங் மால்ககளை கொண்டுள்ன. துபாய், . வணிகம் மற்றும் சிறந்த வாழ்க்கை உதந்துமான இடமாக திகழ்கிறது.
துபாய் டூரிசம் குறித்து DUDigital Global-இன் CEO மனோஜ் தர்மணி கூறுகையில், துபாய் உயர் வாழ்க்கைத் தரம் கொண்ட நாடு மட்டுமல்ல. உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளது. வீக் எண்டு அல்லது பருவ விடுமுறைக்கு மட்டுமல்லாமல், மொத்தமாக குடியேற நினைப்பவர்களுக்கும் துபாய் சிறப்பு அனுமதிவழங்கி வருகிறது.
கோல்டன் visa
UAE வழங்கும் கோல்டன் விசா மற்றொரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. துபாய் அதிக பாதுகாப்பான இடமாக சர்வதேச உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, குழந்தைகளுக்கு நல்ல கல்விமுறை, சூழல் அளிக்க விரும்பும் பணக்காரர்களின் விருபத் தேர்வாக துபாய் உள்ளது.
UAE இன் கோல்டன் விசா
2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட UAE-இன் கோல்டன் விசா. இது ஒரு நீண்ட கால விசா திட்டம் உலகளாவிய முதலீட்டாளர்களையும், பணக்காரர்களையும் ஈர்த்துத் தக்கவைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
UAE கோல்டன் விசாவின் முக்கிய அம்சங்கள்
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் துபாயில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை தங்கலாம். மேலும், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் குறைந்தளவு கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எங்குவேண்டுமானாலும் பயணிக்க முடியும். வணிக விசா 100% வணிக உரிமையை வழங்குகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேற விரும்புபவர்கள் மருத்துவர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ, சுகாதார அமைச்சகம் அல்லது அது தொடர்புடைய அறிவியல்துறையில் இருக்க வேண்டும்.
One Touch Golden Visa
UAE-யின் கோல்டன் விசா விண்ணப்பம் அதன் விரைவான செயல்முறைக்காக அறியப்படுகிறது. இதுவரையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வாயிலாக சுமார் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கோல்சன் விசா வழங்கப்பட்டுள்ளது.