MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • இந்த நாட்டுல நைட் 10 மணிக்கு மேல டாய்லெட் ஃப்ளஷ் பண்ணா ஜெயிலா? உண்மை என்ன?

இந்த நாட்டுல நைட் 10 மணிக்கு மேல டாய்லெட் ஃப்ளஷ் பண்ணா ஜெயிலா? உண்மை என்ன?

Switzerland: சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்கு மேல் டாய்லெட் ஃப்ளஷ் செய்தால் ஜெயில் தண்டனை என்பது உண்மையா? வதந்தியின் பின்னணியில் உள்ள உண்மை என்ன? தெரிந்து கொள்ளப் படியுங்கள்!

2 Min read
Author : Rayar A
Published : Oct 03 2026, 10:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நைட் 10 மணிக்கு மேல டாய்லெட் ஃப்ளஷ் பண்ணா ஜெயிலா?
Image Credit : Gemini AI

நைட் 10 மணிக்கு மேல டாய்லெட் ஃப்ளஷ் பண்ணா ஜெயிலா?

உலகில் ஒவ்வொரு நாட்டிலும் அவற்றுக்கே உரிய விசித்திரமான சட்டங்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில், சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு 10 மணிக்கு மேல் டாய்லெட் ஃப்ளஷ் செய்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் தற்போது பயங்கரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலில் துளியளவும் உண்மையில்லை என்பதே நிதர்சனமாகும். சுவிட்சர்லாந்தில் இது போன்ற தேசிய சட்டம் எதுவும் கிடையாது; எனவே, இரவு நேரங்களில் ஃப்ளஷ் செய்வதற்காக யாரையும் காவல்துறையினர் கைது செய்ய மாட்டார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கடுமையான கட்டுப்பாடுகள்
Image Credit : Gemini AI

கடுமையான கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் உள்ள அப்பார்ட்மெண்ட்கள் மற்றும் வாடகை வீடுகளில் இரவு நேரங்களில் அதிகப்படியான சத்தங்களை எழுப்பக் கூடாது என்பதற்காகக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இவை பொதுவாக 'ஹவுஸ் ரூல்ஸ்' (House Rules) என்று அழைக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட கட்டடங்களில் இரவு நேரங்களில் டாய்லெட் ஃப்ளஷ் செய்வது, வாஷிங் மெஷின் இயக்குவது போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை அந்தந்த வீட்டின் உரிமையாளரோ அல்லது கட்டிட மேலாண்மை நிர்வாகமோ மட்டுமே முடிவு செய்கிறார்களே தவிர, இதற்கு காவல்துறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

34
தூக்கத்தைக் கெடுத்துவிடக் கூடாது
Image Credit : Gemini AI

தூக்கத்தைக் கெடுத்துவிடக் கூடாது

சுவிட்சர்லாந்து மக்கள் தங்கள் ஓய்வு மற்றும் இரவு நேர அமைதியை மிகவும் மதிக்கக்கூடியவர்கள். குறிப்பாக, அங்குள்ள பழைய காலத்து அப்பார்ட்மெண்ட்களில் சுவர்கள் மிகவும் மெலிதாகக் கட்டப்பட்டிருக்கும். இதனால், வீட்டில் நடக்கும் சாதாரண சத்தங்கள் கூட பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எளிதில் கேட்கும் தன்மை உடையவை. டாய்லெட் ஃப்ளஷ் செய்யும் சத்தம் மற்றவர்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சில கட்டிட நிர்வாகங்கள் இதுபோன்ற நடைமுறைகளைக் பின்பற்றுகின்றன.

44
உள்நாட்டு விதிகளை மதிக்க வேண்டும்
Image Credit : Gemini AI

உள்நாட்டு விதிகளை மதிக்க வேண்டும்

வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நைட் நேர சத்தக் கட்டுப்பாடுகளை எவரேனும் தொடர்ந்து மீறினால், வீட்டு உரிமையாளர் தரப்பில் இருந்து எச்சரிக்கைகள் விடுக்கப்படும். மேலும், பக்கத்து வீட்டுக்காரர்களும் இது குறித்துப் புகார் அளிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பிரச்சனைகள் பெரிதாகும் பட்சத்தில் வீட்டை காலி செய்யும்படி மட்டுமே கோருவார்களே தவிர, இரவு 10 மணிக்கு மேல் ஃப்ளஷ் செய்ததற்காக யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க மாட்டார்கள்.

சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்கு மேல் டாய்லெட் ஃப்ளஷ் செய்தால் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்ற செய்தி முற்றிலும் ஒரு வதந்தியே ஆகும். நாடு முழுவதும் இதற்கு சட்டப்பூர்வமான தடை எதுவும் இல்லை என்றாலும், சில குடியிருப்புப் பகுதிகளில் உள்ள உள்நாட்டு விதிகளை நாம் மதிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, நீங்கள் சுவிட்சர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டால், தங்கும் ஹோட்டல் அல்லது அப்பார்ட்மெண்ட் பகுதிகளில் பின்பற்றப்படும் விதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்வது மிகவும் சிறந்தது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Pilot : நடுவானில் கத்திக்குத்து.. 14,000 அடி கீழே பாய்ந்த விமானம்! 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி!
Recommended image2
ஈரானை நரகத்திற்கு விரட்டுவேன்: கொக்கரித்த டிரம்ப்... 'பகவந்த் கேசரி' சீனை போட்டு கலாய்த்த ஈரான்!
Recommended image3
Now Playing
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா வருகை: விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற டொனால்ட் டிரம்ப்!
Related Stories
Recommended image1
USA Lifestyle: அமெரிக்காவுல வீதிக்கு வந்தா ஏன் ஆளையே காணோம்? அவங்க என்னதான் பண்ணுவாங்க?
Recommended image2
USA Lifestyle: அமெரிக்காவில் தரையில் தண்ணீர் ஊற்றினால் லட்சங்களில் அபராதம்.. சுவாரஸ்யமான காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved